என் இசையால் உயிர் பெற்ற குழந்தை: இளையராஜா நெகிழ்ச்சி

உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது.
படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.
படப்பிடிப்பை இளையராஜா தொடங்கி வைத்த காட்சி.
Published on
Summary

இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்றார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் புதிய படம் ‘மஞ்சணத்தி’. படத்தில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி, விது, “காக்கா முட்டை” விக்னேஷ், “வாழை” படப்புகழ் ராகுல் மற்றும் ராகவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பை இளைய ராஜா கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்தார்.

காடுமேடுகளில்

விழாவில் இளையராஜா பேசியதாவது:-

நீங்கள் அனைவரும் காடுமேடுகளில் பிறந்தவர்கள் என்று சொல்கிறீர்கள். நானும் காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்தவன்தான். அங்கிருந்து எப்படியோ இசையைக் கற்றுக்கொண்டு முன்னேறினேன். இசையைச் சொல்லித்தர எனக்கு அருகில் யாரும் இல்லை. ஏதோ ஒரு தாகத்தோடு நானே இசையைக் கற்றுக்கொண்டேன்.

உலகிலுள்ள மிகப்பெரிய மேதைகளெல்லாம் சிறு வயதிலேயே பியானோவைப் பார்த்து, கற்றுக்கொண்டு வளர்ந்தவர்கள். ஆனால் நான் பியானோவைப் பார்ப்பதற்கே 27 வயதாகிவிட்டது. அதனால் நான் எல்லோரையும் விட உயர்ந்தவன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசை எனக்குள் அதுவாகவே வந்தது. எனக்குள் ஓடும் இசையின் ஜீவன் இருக்கிறதே, அது இதுவரை யாருக்கும் வந்ததில்லை; இனியும் வரப்போவதில்லை. இதை நான் கர்வத்தோடு சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொள்ளலாம். ஆனால் கர்வத்தோடுதான் இதைச் சொல்ல வேண்டும்.”

உயிர்பெற்ற குழந்தை

ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் தம்பதியின் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்று விட்டதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது என் இசையை கேட்கச் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் தாயை கண்காணிப்பில் வைத்திருந்த நிலையில், மூன்றாவது நாள் அறுவை சிகிச்சைக்கு முன்பு பரிசோதித்தபோது குழந்தைக்கு உயிர் வந்திருப்பது தெரிய வந்தது. இது உண்மையாக நடந்த சம்பவம். அதற்காக எனக்கு எந்தப் பெருமையும் இல்லை. மஞ்சணத்தி படம் வெற்றிப் படமாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com