

திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய சென்னை வந்துள்ள ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு மக்களுக்காக மிகச்சிறந்த பணிகளை ஸ்டாலின் செய்து வருகிறார்.
அவரது இந்த ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது.
மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும்.
பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் நாசமாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.