நவராத்திரி விழாவில் பங்கேற்க குழித்துறையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட சாமி விக்ரகங்கள்

நவராத்திரி விழா வருகிற 12-ம் தேதி தொடங்கி 10-நாட்கள் நடைபெறுகிறது
நவராத்திரி விழாவில் பங்கேற்க குழித்துறையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்ட சாமி விக்ரகங்கள்
Published on: 
Summary

குழித்துறை வழியாக களியக்காவிளை செல்கிறது. அங்கு இன்று மதியம் தமிழக இந்து அறநிலை துறையினர் கேரளா தேவசம் போர்டு நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. நிர்வாக காரணத்திற்காக 1840-ஆம் ஆண்டு இந்த விழா திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

முருகன்

அதன் பின்பு இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி விக்ரகங்கள் யானை, வெள்ளி குதிரை வாகனம் மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்படும்.

நவராத்திரி விழா

பின்னர் அங்கு 10-நாள் நவராத்திரி விழா பூஜைகளில் பங்கேற்ற பின்பு சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வருவது மரபு. அதுபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 12-ம் தேதி தொடங்கி 10-நாட்கள் நடைபெறுகிறது இதனையடுத்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் குமாரகோவில் முருகன் பத்மநாபபுரம் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதியம்மன் விக்ரகங்கள் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து பாரம்பரிய முறைப்படி மன்னர் உடைவாள் மாற்றி இரு மாநில போலீஸ் மரியாதையுடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று காலை நடைபெற்றது.

குழித்துறை

பின்னர் நேற்று இரவு குழித்துறை மகாதேவர் ஆலய வளாகத்தில் தங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை எட்டு மணிக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சாமுண்டேஸ்வரி அம்மன் கோயில் வளாகம் மற்றும் குழித்துறை தபால் நிலையம் சந்திப்பில் சாலையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பந்தலிடப்பட்டு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

களியக்காவிளை

சாலையின் இரண்டு பக்கங்களிலும் பூஜை புனஸ்காரங்கள் செய்து வாழை இலை தோரணங்கள் கட்டி வரவேற்றனர். தொடர்ந்து குழித்துறை வழியாக களியக்காவிளை செல்கிறது. அங்கு இன்று மதியம் தமிழக இந்து அறநிலை துறையினர் கேரளா தேவசம் போர்டு நிர்வாகிகளிடம் ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் போலீஸ் அணிவகுப்பு மற்றும் அமைச்சர்கள் உட்பட முக்கியமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com