

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, மாற்றுக் கட்சிகளில் இணைவது தொடர்பாக, தவெக அரசு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரை சந்தித்து இன்று புகாரளித்தார்.
ஆளுநர் உடனான சந்திப்புக்கு பின் கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்.,
என்ன முகாந்திரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்கள்? அவர்களுக்கு அமைச்சர் பதவி என ஆசைவார்த்தை காட்டுகிறார்களா? இந்த நடைமுறை தொடரந்துகொண்டே செல்கிறது.
பதவி ஆசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யும் இந்த தவறு தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, தமிழ்நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். ஆட்சி, அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மாற்று கட்சியினரை ஆசைக்காட்டி தங்கள் பக்கம் இழுப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் ஓநாய்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவும், தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு நம்மை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களின் முகமூடியை கிழித்தெறிந்து உண்மையை காட்டவேண்டும் என்பதற்காக ஆளுநரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். அதை ஆவணம் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.” என தெரிவித்தார்.