

திருவள்ளூரில் 2 மகன்களின் மரண சோகத்தில் தம்பதி விஷம் குடித்தனர். மனைவி ஜெயலட்சுமி உயிரிழந்தார், கணவர் மோகன் சிகிச்சையில் உள்ளார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது51). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர்.
இதில் 2-வது மகன் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஷம் குடித்து உயிரிழந்தார். மேலும் மூத்த மகன் விக்னேசும், தனது தம்பி இறந்த 2 நாளுக்கு பிறகு விஷம் குடித்து இறந்துள்ளார்.
2 மகன்களும் விஷம் குடித்து உயிரிழந்ததால் மோகனும், ஜெயலட்சுமியும் மிகுந்த மன வேதனையில் இருந்தனர். இந்த நிலையில் தம்பதி மோகனும், ஜெயலட்சுமியும் நேற்று முன்தினம் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தனர். அவர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மோகனுக்கு தொடர்ந்து சிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.