என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்சி சிவா, அன்புமணி ராமதாசின் சொத்துகள் எவ்வளவு? பிரமாண பத்திரம் தாக்கல்
    X

    திருச்சி சிவா, அன்புமணி ராமதாசின் சொத்துகள் எவ்வளவு? பிரமாண பத்திரம் தாக்கல்

    • நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளாக அன்புமணி ராமதாஸ் மனைவி பெயரில் ரூ.48 கோடி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
    • அன்புமணி பெயரில் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள தி.மு.க.. அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. வேட்பாளர்கள் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தங்களது சொத்து விவரங்களை அளித்துள்ளனர்.

    அதன் விவரம் வருமாறு:-

    திருச்சி சிவா, தனது பிரமாண பத்திரத்தில் கையிருப்பில் ரூ.6 லட்சம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அசையும் சொத்துகளாக அவரது பெயரில் 2 கோடியே 18 லட்சத்து 53 ஆயிரத்து 441 ரூபாயும், அவரது குடும்பத்தினர் பெயரில் 72 லட்சத்து 75 ஆயிரத்து 663 ரூபாயும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் 224 கிராம் தங்க நகைகளும் அடங்கும்.

    மேலும், அவரது பெயரில் ரூ.3 கோடியே 86 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ.73 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலும், குடும்பத்தினர் பெயரில் ரூ.23 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும் அசையா சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார்.

    பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தன்னிடம் கையிருப்பாக ரூ.90 ஆயிரம், மனைவி பெயரில் ரூ.50 ஆயிரம். மகன் பெயரில் ரூ.60 ஆயிரம். மகள் பெயரில் ரூ.65 ஆயிரம் இருப்பதாக கூறி உள்ளார்.

    அசையும் சொத்துகளாக தனது பெயரில் ரூ.22 லட்சத்து 75 ஆயிரத்து 796-ம், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 35 ஆயிரம். மகன் பெயரில் ரூ.21 லட்சத்து 35 ஆயிரம், மகள் பெயரில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 75 ஆயிரம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் 180 பவுன் தங்க நகைகளும் அடங்கும்.

    தனது பெயரில் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும்,மனைவி பெயரில் ரூ.1 கோடியே 43 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக கூறி உள்ளார்.

    அன்புமணி ராமதாஸ் பெயரில் அசையும் சொத்துகளான வங்கி கணக்கு, முதலீடு, ஆபரணங்கள், வாகனங்கள் என ரூ.1 கோடியே 52 லட்சத்து 60 ஆயிரத்து 860-ம், மனைவி சவுமியா பெயரில் ரூ.16 கோடியே 85 லட்சத்து 28 ஆயிரத்து 417-ம், அவரை சார்ந்தவரின் பெயரில் ரூ.93 லட்சத்து 82 ஆயிரத்து 144-ம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளாக அன்புமணி ராமதாஸ் பெயரில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரமும், மனைவி பெயரில் ரூ.48 கோடியே 79 லட்சத்து ஆயிரத்து 486-ம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×