ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க உதவி எண்

ஆம்னி பஸ்களுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது.ஆம்னி பஸ்கள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்று உள்ளது.
ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க உதவி எண்
Published on

அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆம்னி பஸ்களைப் பொறுத்தவரை குளிர்சாதன வசதியில்லா பஸ்கள், குளிர்சாதன வசதி கொண்ட பஸ்கள், பிரீமியம் வகை பஸ்கள் ஆகியவற்றில் இருக்கை, படுக்கை வசதி கொண்டவை என 6 வகையான பஸ்கள் உள்ளன. எனவே, ஒவ்வொரு வழித் தடத்துக்கும் கட்டணம் வேறுவிதமாக இருக்கும்.

பஸ்களின் தரம் மற்றும் வசதியை பொறுத்து பயணிகளே ஒவ்வொரு வழித்தடத்திலும் விருப்பப் படி பஸ்களை முன்பதிவு செய்கின்றனர். இந்தப் பஸ்களில் வசூலிக்கும் கட்டணம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக அந்த பஸ்களைப் பராமரிப்பதற்கும் இயக்குவதற்கும் போதுமானதாக இல்லை. எனவே, இந்த தொழிலுக்கு எந்த பெரிய நிறுவனங்களும் வருவதில்லை. இந்தத் தொழிலில் இருப்பவர்கள் மட்டுமே வேறு வழியில்லாமல் செய்து வருகின்றனர்.

ஆம்னி பஸ்களுக்கென்று மத்திய மற்றும் மாநில அரசின் மோட்டார் வாகன விதிகளின்படி கட்டணம் நிர்ணயம் கிடையாது. இருந்த போதிலும் பயணிகளின் நலன் கருதியும் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணமும் சங்கங்களே அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்து உள்ளோம். ஆம்னி பஸ்கள் கட்டண விவரம் www.aoboa.co.in என்ற இணைய தளத்தில் இடம் பெற்று உள்ளது. ஆம்னி பஸ்கள் கட்டணம் சம்பந்தமான புகார்களை 90433 79664 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com