கொட்டி தீர்த்த கனமழை: நீலகிரி, வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டி தீர்த்த கனமழை: நீலகிரி, வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
Published on

நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com