கொட்டித் தீர்த்த கனமழை- திருமுல்லைவாயல் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர்

வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கொட்டித் தீர்த்த கனமழை- திருமுல்லைவாயல் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர்
Published on: 
Summary

ஒரு நாள் மழைக்கே வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பலத்த மழை பெய்தால் நிலைமை என்னவாகும் என்று நினைத்து அப்பகுதி மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.

கன மழை

கன மழையின் காரணமாக திருமுல்லைவாயல் குடியிருப்புகளை மழை நீர் சூழந்து உள்ளது. அங்குள்ள விவேகானந்தர் தெரு, விஜி தெருவில் மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் வீடுகள் முன்பு பெருமளவில் தேங்கியது. தாழ்வான சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம்அடைந்தனர்.

வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மழைநீர்வடிகால் வசதி

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீரை வெளியேற்றுவதற்கு உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தாதே இதற்கு காரணம்.

எனவே இப்பகுதியில் மழைநீர்வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும் உடனடியாக தேங்கி உள்ள நீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ஒரு நாள் மழைக்கே வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்பதால் பலத்த மழை பெய்தால் நிலைமை என்னவாகும் என்று நினைத்து அப்பகுதி மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

X