

வட–கி–ழக்கு பரு–வ–மழை தொடங்–கி–யதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்–க–ளாக பல பகு–தி–களில் பர–வ–லாக மழை பெய்து வரு–கிறது.
திருச்–சி–யில் நேற்று பக–லில் வானம் மேக–மூட்–டத்–து–டன் காணப்–பட்ட நிலை–யில், மாலை 6 மணிக்கு இடி, மின்–ன–லு–டன் பலத்த மழை பெய்–தது. இந்த மழை இரவு 11 மணிக்கு மேலும் நீடித்–தது. இந்த மழை கார–ண–மாக திருச்சி ஜங்–ஷன் ரெயில் நிலை–யம், அரிஸ்டோ மேம்–பா–லம், டி.வி.எஸ்.டோல்–கேட், பாலக்–கரை உள்–ளிட்ட பகு–தி–களில் மழை–நீர் சாலை–களில் பெருக்–கெ–டுத்து ஓடியது.
இந்த மழை–யால் ஆயு–த– பூ–ஜைக்கு பொருட்–கள் வாங்க சென்–ற–வர்–கள் கடும் அவதி அடைந்–த–னர். மேலும் மழை கார–ண–மாக பிரதான சாலை–களில் மழை–நீர் தேங்–கி–ய–தால் வாக–னங்–கள் ஊர்ந்து சென்–றன. டி.வி.எஸ். டோல்–கேட், பழைய பால்–பண்ணை, காந்தி மார்க்–கெட், தஞ்–சா–வூர் சாலை உள்–ளிட்ட பகு–தி–களில் கடும் போக்–கு–வ–ரத்து நெரி–சல் ஏற்–பட்–டது.
புதுக்–கோட்டை மாந–கர பகு–தி–களில் நேற்று மாலை இடி மின்–ன–லு–டன் பலத்த மழை பெய்ய தொடங்–கி–யது. இந்த மழை இரவு 7 மணி வரை நீடித்–தது. இந்த கன– ம–ழை–யி–னால் புதுக்–கோட்டை மாவட்ட கலெக்–டர் அலு–வ–ல–கம், புதிய பஸ் நிலை–யம் மற்–றும் பழைய பஸ் நிலை–யம் உள்–ளிட்ட முக்–கி–யச் சாலை–களில் மழை–நீர் பெருக்–கெ–டுத்து ஓடி–யது. சாலை–களில் சென்ற வாகன ஓட்–டி–கள், மழை–யில் நனைந்–த–படி சென்–ற–னர்.
புதுக்–கோட்டை புதிய பஸ் நிலை–யத்–தில் மழை–நீர் குளம்–போல் தேங்கி நின்–ற–தால் பயணி–கள் அவ–தி–ய–டைந்–த–னர். இந்–தக் கன–ம–ழை–யால் வெப்–பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி–ய–தால் பொது–மக்–கள் மகிழ்ச்–சி–ய–டைந்–த–னர்.
கரூர் மாவட்–டம் குளித்–தலை மற்–றும் அதன் சுற்–று–வட்–டார பகு–தி–களில் கடந்த 2 நாட்–க–ளாக இரவு நேரத்–தில் கன–மழை பெய்–தது. இத–னால் வாழை, நெல் சாகு–படி செய்த வயல்–களில் மழை நீர் புகுந்–தது. தற்–போது குளித்–தலை பகு–தி–யில் சம்பா நெல் சாகு–படி நடை–பெற்று வரு–கிறது.
இந்–நி–லை–யில் கணக்–கப்–பிள்–ளை–யூர், பணிக்–கம்–பட்டி ஆகிய பகு–தி–களில் நடவு செய்து 4 நாட்–களே ஆன சுமார் 12 ஏக்–கர் நெற்–பயிர்–கள் நீரில் மூழ்–கி–யது. மேலும் மழை நீடித்–தால் சம்பா சாகு–படி செய்த அனைத்து விவ–சாய நிலங்–களும் நீரில் மூழ்கி நாச–மாகும் அபாய நிலை–யில் உள்–ளது. மேலும் வாழை சாகு–ப–டி– தோட்டங்களிலும் மழை–நீர் புகுந்து வடிய வழி–யில்–லா–மல் தேங்கியுள்ளது.