திருச்செந்தூரில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை- கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி

வீரபாண்டியன் பட்டணம், அமலிநகர், ஆத்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
திருச்செந்தூரில் விடிய, விடிய வெளுத்து வாங்கிய கனமழை- கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி
Published on: 
Summary

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான பாதைகளில் ஒன்றான நாழிக்கிணறு செல்லும் பாதையில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது.

திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

விடிய, விடிய மழை

நேற்று நள்ளிரவு முதல் இனறு காலை வரை திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

குறிப்பாக வீரபாண்டியன் பட்டணம், அமலிநகர், ஆத்தூர், ஆறுமுகநேரி, உடன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதிகாலை நேரத்திலும் தொடர்ந்து பெய்த மழையால் பிரதான சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.

கனமழை

ஏற்கனவே ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வரும் நிலையில், தொடர்ந்து பெய்யும் கனமழையால் சாலையோரங்களில் கடை அமைத்து வியாபாரம் செய்யும் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர் முருகன்

மேலும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும் பிரதான பாதைகளில் ஒன்றான நாழிக்கிணறு செல்லும் பாதையில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்த பகுதியில் ஒரு காவலர்கள் கூட இல்லாத நிலையில் பஸ் கண்டக்டர்கள் கீழே இறங்கி போக்குவரத்தை சீர் செய்து வருகிறார்கள். மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

X