சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் மழை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
chennai rains
Published on

தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்ட்ரல், அடையார், கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com