தமிழ்நாட்டில் 100 டிகிரியை நெருங்காத வெயில்: அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி வெப்பம் பதிவு

ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் 100 டிகிரியை நெருங்காத வெயில்: அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி வெப்பம் பதிவு
Published on

தமிழகம், புதுவையில் இன்று எந்த ஒரு இடத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோட்டில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசியது

இதனையடுத்து தமிழகத்தில் மே மாதத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பொழிந்தது. இதனால் தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி நிலவியது.

இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் வெப்ப அலை வீச தொடங்கியுள்ளது. வட இந்தியாவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் அதிகமாக வெப்பம் பதிவான இடங்கள்

சென்னை நுங்கம்பாக்கம் - 96.8, கரூர் பரமத்தி - 97.7, மதுரை விமான நிலையம் - 94.46, பாளையங்கோட்டை - 97.88, தஞ்சாவூர் - 96.8

சுற்றுலா தளங்களில் பதிவான வெப்பநிலை விவரங்கள் பின்வருமாறு:-

குன்னூர் - 75.2, கொடைக்கானல் - 68.9, ஊட்டி - 67.28, வால்பாறை - 78.8

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com