Hard Disk திருட்டு: யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது பேர சக்தி?- எடப்பாடி பழனிசாமி

Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை வேண்டும்.
Hard Disk திருட்டு: யாரை காப்பாற்ற முயற்சிக்கிறது பேர சக்தி?- எடப்பாடி பழனிசாமி
Published on

மின்துறை அலுவலகத்தில் 18 ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரத்தில் யாரை காப்பாற் முயற்சிக்கிறது பேர சக்தி? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 Hard Disk-கள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.

தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.

தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?

Hard Disk திருட்டு குறித்து முறையான CBI விசாரணை நடத்தப்பட்டு,

உண்மை வெளிவர வேண்டும்!

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com