

தொடர்ந்து பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் தற்போது கொளத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 26-வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). கடந்த 2002-ம் ஆண்டு போலீஸ் பணிக்குச் சேர்ந்த இவர் தற்போது தலைமைச் செயலக குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருகிறார்.
திருமணம் ஆன இவர் முதல் மனைவி இருக்கும்போதே 2-வதாக 46 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். 2-வது மனைவிக்கு ஏற்கனவே முதல் கணவர் மூலம் 25 வயது மகன், 17 வயதில் மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஏட்டு வேல்முருகன் 2-வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் கர்ப்பம் ஆன அந்த பெண்ணுக்கு கடந்த 2022-ம் ஆண்டு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்பும் செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தரப்பில் தற்போது கொளத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து வேல்முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து ஏட்டு வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.