குணா குகை அருகே உள்ள அரிய நாவல் மரங்களின் வேர்களை சுற்றி வேலி அமைக்க முடிவு

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
குணா குகை அருகே உள்ள அரிய நாவல் மரங்களின் வேர்களை சுற்றி வேலி அமைக்க முடிவு
Published on: 
Summary

வேர்களின் மீது சுற்றுலா பயணிகள் மிதித்தும், அமர்ந்தும் புகைப்படம் எடுப்பதால் அதன் தன்மை மாறிவிடும் சூழல் உள்ளது. எனவே வேர்கள் மீது சுற்றுலா பயணிகள் அமர்வதை தவிர்க்க மரத்தை சுற்றி விரைவில் வேலி அமைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களில் குணா குகையும் ஒன்று. மர்மமான ஆபத்தான மற்றும் அதிசயம் நிறைந்த இந்த குகைக்குள் நுழைய பல ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டு முற்றிலும் தற்போது மூடப்பட்டுள்ளது.

அரிய வகை மரம்

இருந்தபோதிலும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இங்கு பல நூறு ஆண்டுகள் பழமையான மரங்களின் வேர்கள் ஒன்றொடு ஒன்று பிணைந்து தரைக்கு மேலே தெரியும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

சுற்றுலா பயணிகள்

இந்த வேர்கள் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவும், அழகாகவும் இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வேர்களின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்து செல்வார்கள். இந்நிலையில் இயற்கையின் அதிசயமான இந்த வேர்களை பாதுகாக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

வேலி அமைக்க முடிவு

இங்குள்ள மரம் அரியவகை மலைநாவல் இனத்தை கொண்டதாகும். இந்த மரங்களை வேறு எங்கும் வளர்ப்பது கடினம். அதேபோல் அழிப்பது எளிது. இந்த வேர்கள் இந்த அளவுக்கு வளர்வதற்கு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது. ஆனால் வேர்களின் மீது சுற்றுலா பயணிகள் மிதித்தும், அமர்ந்தும் புகைப்படம் எடுப்பதால் அதன் தன்மை மாறிவிடும் சூழல் உள்ளது. எனவே வேர்கள் மீது சுற்றுலா பயணிகள் அமர்வதை தவிர்க்க மரத்தை சுற்றி விரைவில் வேலி அமைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரி

இது குறித்து வனத்துறை அதிகாரி தெரிவிக்கையில், பழமையான சில வகை நாவல்மரங்களின் முதன்மை வேர்கள் நீர் மற்றும் ஆக்சிஜனை பெற மண்ணின் மேற்பரப்பில் வளர்கின்றன. சில வேர்கள் ஆழமாக செல்லாமல் பரவலாக படரும் தன்மை கொண்டவை. அதன்மீது உள்ள மண் கழியும்போது வேர்கள் எளிதாக வெளியே தெரிகின்றன. எனவே இந்த வேர்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com