

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேரடியாக சென்று ஆலோசனை நடத்தினர்.
அப்போது, தங்களுக்கு தற்போது வழங்கப்படும் உணவுக்குப் பதிலாக உணவுப்படி வழங்குகள், வேலையை நிரந்தரமாக்குதல், மகப்பேறு விடுப்பு, சம்பளத்தை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
முதற்கட்டமாக சில கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறோம். அதன்பின் அக்டோபர் மாதம் 3-ந்தேதி மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக்கு பதிலாக ரூ.50 உணவுப்படி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 24,264 தூய்மை பணியாளர்களுக்கு தினமும் ரூ. 50 உணவுப்படி வழங்க ரூ. 44.28 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.