குன்னூர்-பர்லியார் இடையே அரசு பஸ்கள் மீண்டும் இயக்கம்

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர், குன்னூர் சப்-கலெக்டர் ஆகியோர் மலைப்பாதையை ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு பஸ்
அரசு பஸ்
Published on: 
Summary

குன்னூர் மலைப்பாதையில் வருகிற திங்கட்கிழமை வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 23-ந்தேதி பெய்த கனமழையால் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து அந்த மலைப்பாதையில் கோவை-நீலகிரி மாவட்ட நிர்வாகங்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆகியவை சார்பில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தன.

அரசு பஸ்

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர், குன்னூர் சப்-கலெக்டர் ஆகியோர் மலைப்பாதையை ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு பர்லியார், கோழிக்கரை, குறும்பாடி, சின்ன குறும்பாடி, மரப்பாலம், நஞ்சப்பசத்திரம், காட்டேரி பூங்கா, ரன்னிமேடு, டபுள் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் நலன் கருதி குன்னூர் பர காலை 7.30 மணிக்கு பர்லியார்-குன்னூர் வரையிலும், மாலை 5 மணிக்கு குன்னூரில் இருந்து பர்லியார் வரையிலும் அரசு பஸ்களின் இயக்கம் தொடங்கியது.

குன்னூர் மலைப்பாதை

குன்னூர் மலைப்பாதையில் வருகிற திங்கட்கிழமை வரை போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குன்னூரை சேர்ந்த மாணவர்கள் மேட்டுப்பாளையம் கல்லூரிகளுக்கு சென்று திரும்ப ஏதுவாக, அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X