‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெக அரசை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடைமை.
‘சினிமா பார்த்து அழுதுட்டு சீன் ஓட்டுவது அல்ல அரசாங்கம்’ - தவெகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!
Published on

காவிரி ஆற்றில் இருந்து ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தண்ணீரை கர்நாடக இன்னும் வழங்கவில்லை. மேலும் மேகதாது அணையை கட்டியே தீர்வோம் என அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பிலோ, முதலமைச்சர் விஜய்யோ இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இந்த விவகாரங்கள் தொடர்பாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

“இன்றுவரை காவேரியில் தண்ணீர் திறக்கவில்லை. மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடகா தைரியமாக கூறுகிறது. நம் அரசு என்ன செய்கிறது?

அதுமட்டுமில்லாமல் நேற்று அரசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு டன் அரிசிவிலை நேற்று மட்டும் ரூ.15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அரிசிக்கே இந்த நிலை என்றால், மற்றப் பொருட்களின் விலையும் உயரும். அரசு இதுகுறித்து சிந்திக்க வேண்டும். வெறும் சினிமா பார்த்துவிட்டு தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகொண்டு வெறும் சீன் ஓட்டுவது அரசு கிடையாது. இது பலகோடி மக்களின் வாழ்வாதாரம்.

எல்நினோ காலநிலை,வறட்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் மழை இல்லை. விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடைமை.

மீண்டும் ஒரு லாக்கப் மரணம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் என தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும். காவல்துறைக்கு ஒருவரை அடித்துக்கொல்ல அதிகாரம் இல்லை. விசாரியுங்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள். மற்ற எந்த அதிகாரமும் காவல்துறைக்கு இல்லை.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com