

பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் இருந்த விவகாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அரசு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்ததற்கு தவெக எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அரசு நிகழ்ச்சியில் கட்சி சார்ந்தவர்கள் இருக்க கூடாது. கட்சிகாரர்களை முன்னிலைப்படுத்த அரசு நிகழ்ச்சியை பயன்படுத்த கூடாது.
எம்பி., எம்எல்ஏ பதவியில் இல்லாத ஒருவரை அரசு நிகழ்ச்சி விழா மேடையில் அமர வைத்தது தவறு, அது ஒரு மோசமான முன்னுதாரணம்.
அரசு நிகழ்ச்சியில் கட்சி சார்ந்தவர்கள் இருப்பதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக தான் காரணம். மக்கள் சமாதானமாக தான் உள்ளனர், பாஜக தான் பிரச்சினை செய்கிறது.
திருப்பரங்குன்றத்தில் பாஜக உள்ளே வந்ததால் மக்களின் அமைதி போனது.
இவ்வாறு அவர் கூறினார்.