ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் சிக்கிய சூரை மீன் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை!

மீன் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tuna caught in fisherman
Published on
Summary

ராமேஸ்வரம் அருகே மீனவர் வலையில் 112 கிலோ எடை கொண்ட சூரை மீன் சிக்கியது.

ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் இருந்து 6 மீனவர்கள் ஒரு நாட்டுப்படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீனவர்கள் வழக்கம்போல் வலையை வீசி மீன்பிடித்தபோது, எதிர்பாராதவிதமாக ராட்சத அளவு கொண்ட மீன் ஒன்று வலையில் சிக்கியது. மிகவும் சிரமப்பட்டு அந்த மீனைப் படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்து பார்த்தபோது, அது 112 கிலோ எடையும், 6 அடி நீளமும் கொண்ட அரிய வகை சூரை மீன் என்பது தெரியவந்தது.

கேரளாவுக்கு அனுப்பி வைப்பு

கரைக்கு கொண்டுவரப்பட்ட இந்த பிரம்மாண்ட மீனைக் காண அப்பகுதி மீனவர்களும், பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டனர். தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில், அந்த சூரை மீனை உள்ளூர் வியாபாரி ஒருவர் ரூ.22,000 கொடுத்து வாங்கினார். பின்னர் அந்த மீன் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு முன்பும் இதே போன்று 106 கிலோ எடை கொண்ட பெரிய சூரை மீன் ஒன்று பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com