ஜெம் வீரமணி வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
Gem Veeramani
Published on: 
Summary

ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெம் வீரமணி

'ஜெம்' கிரானைட் தொழில் அதிபர் வீரமணி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை மூலம் சீரழித்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு துணை போனதாக சாந்தி என்ற பெண்ணும், அவரது கணவருமான மகேந்திர சிம்கன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் சென்னை போக்சோ கோர்ட்டில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், 'கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி எங்களை கைது செய்த போலீசார், 24 மணி நேரத்துக்கு பிறகே கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்திய குழந்தைகள் நல அமைப்பு

2019-ம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 6 ஆண்டுகள் தாமதமாக 2025-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி இந்திய குழந்தைகள் நல அமைப்பு அளித்த புகாரில் மறுநாள் (அதாவது 7-ந்தேதி) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கைதான சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'ஏற்கனவே வீரமணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அளித்த தகவலின் அடிப்படையில் இவர்கள் இருவரிட மும் விசாரணை நடத்த வேண்டும். இன்னும் எத்தனை சிறுமிகள் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர்? எவ்வளவு நாட்களாக குற் றம் நடந்தது? வேறு யார் யாருக்கு எல்லாம் தொடர்பு என்பது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியுள்ளதால், இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

3 நாட்கள் அனுமதி

இந்த மனு மீதான விசாரணையின்போது, சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

சிறப்பு புலனாய்வு குழு

இந்நிலையில் ஜெம் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐஜி தேன்மொழி தலைமையில் 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், சென்னை காவல் இணை ஆணையர் திஷா மிட்டல், எஸ்பி முத்தரசி, துணை காவல் ஆணையர் கீதாஞ்சலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட குழு சென்னை காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com