நீலகிரி ஊராட்சி பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை

குவிந்து கிடக்கும் குப்பைகளை கால்நடைகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி ஊராட்சி பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- பொதுமக்கள் கோரிக்கை
Published on: 

தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சியில் உள்ள அம்மன் நகரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இங்குள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி குப்பைகள் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை கால்நடைகள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள்

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X