காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை

சாலை முழுவதும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு குப்பை கழிவுகள் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை
Published on: 
Summary

குப்பை கிடங்கை அகற்றவும், தேங்கி கிடக்கும் குப்பை கழிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் எதிர்ப்பை மீறி குப்பை கிடங்கு அமைக்கபட்டது.

குப்பைகள்

இங்கு குன்றத்தூர் ஒன்றியம் மற்றும் தாம்பரம், பல்லாவரம் மாநகராட்சி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள பல்வேறு ஊராட்சிகளில் உள்ள மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என அனைத்து கழிவுகளும் நாள் தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் டன்கணக்கில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.

சாலை

அளவுக்கு அதிகமாக குப்பை கழிவுகள் ஏற்றி வரும் லாரிகள் தார் பாய் கொண்டு மூடாததால் அவை காற்றில் பறந்து சிங்கபெருமாள் கோவில், பெருமந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுகள் சாலையில் கொட்டி கிடக்கிறது. சாலை முழுவதும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு குப்பை கழிவுகள் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கிடங்கில் குப்பை கழிவுகள் மலை போல் காட்சி அளிக்கிறது.

குப்பை கழிவுகள்

மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டு இருப்பதாகவும், மேலும் காற்று மாசும் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அப்பகுதியில் இருந்து குப்பை கிடங்கை அகற்றவும், தேங்கி கிடக்கும் குப்பை கழிகளை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com