ஆற்காட்டில் இசையமைப்பாளார் தேவாவின் இறுதி சடங்கு...

ராணிப்பேட்டை ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் தேவாவின் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.
music composer deva
Published on: 

தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம் அடித்தட்டு மக்களின் இதயங்களை வென்ற தனித்துவமிக்க இசையமைப்பாளர், 'தேனிசைத் தென்றல்' தேவா இன்று சென்னையில் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

சொந்த ஊரில் இறுதிசடங்கு

திடீர் மாரபடைப்பால் உயிரிழந்த தேவாவின் உடல் நாளை பூர்வீக வீடான ராணிப்பேட்டை ஆற்காடு அருகே உள்ள மாங்காடு கிராமத்தில் தேவாவின் உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதாக தேவாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மரியாதை

மறைந்த பிரபல கானா பாடகர் புகழ்பெற்ற திரையிசை அமைப்பாளர், 'தேனிசைத் தென்றல்' தேவாவின் உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . கானா இசையை முன்னணிக்கு கொண்டு வந்த பெருமைக்குரிய இவரது மறைவு ஒட்டுமொத்த கலை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

தமிழ் திரையிசைக்கும், கானா கலைக்கும் அவர் ஆற்றிய அரிய பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த உயரிய அரசு மரியாதை அறிவிக்கப்பட்டுள்ளது

தேவாவின் மறைவுக்குத் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com