முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை - தமிழக அரசு

எதிர்வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
dhotis- sarees
Published on: 
Summary

தீபாவளிப் பண்டிகைக்கான வேட்டி மற்றும் சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தீபாவளிப் பண்டிகைக்கான வேட்டி மற்றும் சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த விநியோகப் பணிகள் இன்று (03.11.2026) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

நவம்பர் 7-ஆம் தேதி வரை..

முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். தகுதியுள்ள பயனாளிகள் தங்களது குடும்ப அட்டையுடன் நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, எதிர்வரும் நவம்பர் 7-ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பில் விநியோகப் பணி

இந்தத் திட்டம் எவ்விதத் தடையுமின்றி, தாமதமின்றித் தகுதியான முதியோர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நியாய விலைக் கடைகளுக்கான நகர்வு மற்றும் விநியோகப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். பயனாளிகள் எளிய முறையில் தங்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

X