அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை முதலைமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.க.-வில் இணைந்தார்

அமைச்சர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்தவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.
தவெக-வில் இணைந்த செம்மலை
தவெக-வில் இணைந்த செம்மலை
Published on: 

தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையம் சென்றார்.

அங்கிருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள மாருதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டம் மேடைக்கு மதியம் 3.40 மணிக்கு வந்தடைந்தார். கோவையில் இருந்து திருப்பூர் வந்த முதலமைச்சர் விஜய்க்கு சாலையில் நின்ற பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பிரசார பொதுக்கூட்ட இடத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள் மற்றும் தவெக தலைவர்கள் வரவேற்பு அளித்தனர்.

தவெக-வில் இணைந்த செம்மலை

அதிமுக-வில் இருந்து விலகி தவெக-வில் சேர்ந்த செம்மலையை த.வெ.க. துண்டு அணிந்து கட்சியில் இணைத்துக் கொண்டார். அமமுக கட்சியில் இருந்து வெற்றி பெற்ற மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜிம் முதலமைச்சர் விஜயை வரவேற்றார். மேலும், சமீபத்தில் அதிமுக-வில் இருந்து விலகி த.வெ.க.-வில் இணைந்த தலைவர்கள் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு விஜய பாஸ்கர்களும் முதலமைச்சர் விஜயை வரவேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com