

புலியால் இனி ஒரு உயிர் போகாது, மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு வண்டலூர் அல்லது புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.
சட்டசபையில் கூடலூரில் புலி தாக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் திராவிட மணி, "கூடலூர் பகுதியில் புலி தாக்கி 2 பேர் இறந்ததால் அந்த குடும்பத்திற்கு ரூ.25 லட்சமும், வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். உடனடியாக புலியை சுட்டு பிடிக்க வேண்டும், அல்லது மயக்க ஊசி போட்டு பிடிக்க வேண்டும். நீலகிரியில் இரண்டு மாதங்களில் 8 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். உடனடியாக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இதை தொடர்ந்து பேசிய பா.ஜ.க உறுப்பினர் போஜராஜன்," கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு பேர் புலித் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பில்லாத சூழ்நிலை உள்ளது. குண்டு வைத்து புலியை பிடித்து இருந்ததால் உயிரை காப்பாத்திருக்க முடியும். பழைய திட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புலியை கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.
அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம்," புலிகள் தொடர்ந்து மக்களை தாக்கி வரும் நிலையில் அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், பாமக உறுப்பினர் கணேஷ் குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் மட்டுமல்ல அரசு வேலை வழங்க வேண்டும். புலியை கொல்லாமல் மயக்க மருத்து கொடுத்து பிடித்து புலிகள் காப்பகத்தில் அடைக்கவேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித் குமார், " கூடலூரில் இரண்டு பேரை கொன்ற புலியை பிடிக்க முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க உடனே உத்தரவிடப்பட்டதாகவும், 3 வனப்படை அமைக்கப்பட்டுள்ளது அத்துடன், 3 பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து மேலும் ஒரு மருத்துவ குழு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளது.
கேமரா மூலம் புலியை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 9 பேர் உயிரிழந்த பிறகு தான் புலி பிடிக்கப்பட்டது. ஆனால் தவெக அரசு 2 பேர் உயிரிழந்தவுடன் புலியை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த புலியால் இனி ஒரு உயிர் போகாது, மக்களை அச்சுறுத்தும் புலி விரைவில் பிடிக்கப்பட்டு வண்டலூர் அல்லது புலிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.