பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது- பக்தர்கள் செல்ல தடை

கோவை மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது- பக்தர்கள் செல்ல தடை
Published on: 
Summary

கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரையில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒரே கருவறையில் 2 ஆஞ்சநேயர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இதன்காரணமாக பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வெள்ளம் சூழ்ந்தது

இதற்கிடையே கோவை மாவட்ட வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆனைமலை பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

ஆஞ்சநேயர் கோவில்

இந்த நிலையில் ஆனைமலை பாலாற்றங்கரையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

மேலும் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனைமலை பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். அப்போது அவர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com