தூத்துக்குடியில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை

மீனவர்கள் தங்களின் படகுகளை கரைகளில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை
Published on: 
Summary

மீனவர்கள் தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் முத்தரையர் காலனி விவேகானந்தர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டு படகுகளில் கணவாய் மீன் பிடி தொழில் மற்றும் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.

மீனவர்கள் புகார்

இந்த மீனவர்கள் மீன் பிடிப்பிற்காக தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார கடல் பகுதிக்கு சென்று கணவாய் மீன்கள் மற்றும் தூண்டில் மீன் பிடிப்பு செய்யும்போது அந்த பகுதிக்கு வரும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மீனவர்கள் வந்து தங்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என கூறி தாங்கள் பிடித்த மீன்களை பறித்துக் கொண்டும் அடித்து விரட்டுவதாக புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் திருச்செந்தூர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்த போது முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் இன்று மீனவர்கள் தங்களின் படகுகளை கரைகளில் நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீனவர்கள் தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்வளத்துறை அதிகாரிகள்

இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் இதுபோன்று சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com