வானிலை மையம் எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.
வானிலை மையம் எச்சரிக்கை எதிரொலி: தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Published on
Summary

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளதையடுத்து தூத்துக்குடியில் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழக கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வங்கக்கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும். கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகங்களில் தொலை தூர புயலை எச்சரிக்கும் வகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று ஏற்றப்பட்டு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் காற்றின் வேகம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் தங்களுடைய படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கவும் கடற்கரை ஓரங்களில் உள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனால் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் வானிலை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக, விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com