மாமல்லபுரம் கடலில் அதிவேக காற்று வீசுவதால் மீனவர்கள் அச்சம்

கடல் நீரின் இழுப்பு திசையும் கணிக்க முடியாத நிலை உள்ளது.
மாமல்லபுரம் கடலில் அதிவேக காற்று வீசுவதால் மீனவர்கள் அச்சம்
Published on: 
Summary

புயல் சின்னம் காரணமாக மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு தொடங்கி, புதிய கல்பாக்கம் வரையில், தற்போது கடலில் அதிவேகத்தில் காற்று வீசி வருகிறது.

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு, வெண்புருஷம், மாமல்லபுரம், தேவனேரி, புதுஎடையூர், பட்டிப்புலம், சூளேரிக்காடு, காட்டுக்குப்பம், நெம்மேலி, புதிய கல்பாக்கம் ஆகிய மீனவர் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

புயல் சின்னம்

வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு தொடங்கி, புதிய கல்பாக்கம் வரையில், தற்போது கடலில் அதிவேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் கடல் நீரின் இழுப்பு திசையும் கணிக்க முடியாத நிலை உள்ளது.

மீன்பிடி வலைகள்

இதன் காரணமாக கொக்கிலமேடு மீனவர்கள் கடலில் நீண்ட தூரம் செல்லாமல், குறிப்பிட்ட பகுதி வரை சென்று அருகிலேயே மீன்களை பிடிக்கின்றனர். ஒருசில மீனவர்கள் கடலுக்கு செல்லாமல், கடற்கரையில் அமர்ந்து திருக்கை மீன்களை பிடிப்பதற்காக சேதமடைந்த மீன் பிடி வலைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த மீனவர் முருகன் கூறுகையில்

தற்போது கடலில் அதிகப்படியான காற்று வீசி வருகிறது. இதனால், பல மைல் தூரம் சென்று மீன்களை பிடிக்க முடியவில்லை.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக, கடலின் அலைகள், நீரோட்டம், அதன் தட்பவெப்பம் இவைகளை நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் காற்று குறைந்ததும், கரையில் இருந்து சிறிது தூரம் வரை சென்று திருக்கை மீன்களை மட்டும் பிடிப்பதற்காக, புது வலைகளை கட்டுவதும், சேதமடைந்த வலைகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com