

ரூ.1200-க்கும், பாறை மற்றும் சங்கரா, திருக்கை உள்ளிட்ட மீன்கள் ரூ.600-க்கும் விற்கப்பட்டது.
அக்வான் புயல் எச்சரிக்கை காரணமாக கடந்த 2 வாரமாக காசிமேடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
இதன்பின்னர் ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்க வேண்டும், முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் காசிமேடு மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்று காலை விசைப்படகு மீனவர்கள் ஏராளமானோர் கரைக்கு திரும்பினர். இதனால் காசிமேட்டில் மீன்விற்பனை 2 வாரத்திற்கு பிறகு மீண்டும் களை கட்டியது. அதிகாலை முதலே ஏராளமானோர் மீன்வாங்க குவிந்தனர்.
வஞ்சிரம், வவ்வால், ஷிலா, திருக்கை உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் மற்றும் சிறிய வகை மீன்களான மத்தி, சங்கரா, பாரை, காணங்கத்தை நண்டு, இறால் உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். ஏல முறையில் விற்கப்படும் மீன்களை சுற்றுவட்டார பகுதியில் சில்லறை விலைக்கு விற்பனை செய்யும் மீனவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மீன்விலை சற்று அதிகாமாக இருந்ததாக மீன்பிரியர்கள் தெரிவித்தனர்.
ரூ.1200-க்கும், பாறை மற்றும் சங்கரா, திருக்கை உள்ளிட்ட மீன்கள் ரூ.600-க்கும் விற்கப்பட்டது. காசி மேட்டில் மீன்விலை (கிலோவில்)வருமாறு:-
வவ்வால் மீன்-ரூ.600, திருக்கை-ரூ.700, ஷிலா-ரூ.500,சங்கரா-ரூ.500, மத்தி-ரூ.400, கவலை மீன் -ரூ.300, கானாங் கத்தை-ரூ.300, நவரை-ரூ.200, தோல் பாறை-ரூ.500, இறால்-ரூ.400, நண்டு-ரூ.300, நெதிதிலி-ரூ.300, கடுமா-ரூ.300.