கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்டில் சன்னரக அரிசி ரூ.30-க்கு விற்பனை: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பொது மக்களின் தேவைக்கேற்ப ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும்.
அமைச்சர்கள்
அமைச்சர்கள்
Published on: 
Summary

பொது மக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை இன்று (17.10.2026) சென்னை, ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள காமதேனு அங்காடியில் தொடங்கி வைக்கப்பட்டது. உணவுதுறை அமைச்சர் பி. வெங்கட்ராமன் கூட்டுறவுத்துறை அமைச்சர் வ. காந்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

சன்னரக அரிசி

இத்திட்டம் சென்னையில் 30 இடங்களில் முதல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டமானது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக தொடங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலமாக சன்னரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 25 ஆயிரம் மெட்ரிக் டன் சன்னரக அரிசியை, கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ஒன்றுக்கு ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரிசி விலை

பொது மக்களின் தேவைக்கேற்ப ஒருவருக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும். இதன் மூலம் பொது மக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com