FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

FCRA திருத்த மசோதாவால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என்றார்.
speaker JCD prabhakar
Published on: 

தமிழக சட்டசபையில், வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது அவர் கூறுகையில், FCRA மசோதாவை திரும்பப்பெற வேண்டும். FCRA விதிமுறைகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி, சிறுபான்மையினர் கல்வி நிறுவன செயல்பாட்டை பாதிக்கும். மத, கல்வி, மருத்துவ, சமூக அமைப்புகள், மாநில அரசுகளுடன் மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தவேண்டும். FCRA சட்டத்தால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். FCRA திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது என தெரிவித்தார்.

FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானத்தை உறுப்பினர்கள் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதனை தொடர்ந்து FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை.

இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com