எம்.பிக்களை எப்படி நடத்த வேண்டும்.? - விசிக எம்பி ரவிக்குமார் அறிவுரை

மத்திய அரசின் இந்த உத்தரவை சரியாக பின்பற்றும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும்.
Ravikumar mp
Published on: 

அரசு அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட்ட வேண்டும். மேடையில் சரியான இருக்கை வரிசை செய்யப்பட வேண்டும்.மத்திய அரசின் இந்த உத்தரவை சரியாக பின்பற்றும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்த வேண்டும்,

திருச்சியில் குத்து விளக்கு ஏற்றுவது தொடர்பாக காங். எம்.பி., தவெக எம்எல்ஏ இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில் விசிக எம்.பி. ரவிக்குமார் இதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ்தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

அரசு அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும்.

ப்ரோட்டோகால் படி இந்திய அரசின் செயலாளர்கள் தகுதிக்கு மேலாக உறுப்பினர்கள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு பொது நிகழ்ச்சிகளில் அவர்களுக்காக முறையான மற்றும் வசதியான இருக்கை ஏற்பாடுகளும், மேடையில் சரியான இருக்கை வரிசையும் செய்யப்பட வேண்டும்.

தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படும் அழைப்பிதழ்கள் மற்றும் ஊடக நிகழ்வுகளில், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள அத்தொகுதியின் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறலாம்.

ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தால், அவரது தொகுதியின் பகுதியாக உள்ள மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவறாமல் அழைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த உத்தரவை சரியாகப் பின்பற்றும்படி மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்களும் வருவாய்த்துறை மற்றும் பிற அலுவலர்களுக்கு இந்த உத்தரவைத் தெரியப்படுத்த வேண்டும்.

என்று குறிப்பிட்டுள்ளார்

X

Maalai Malar
www.maalaimalar.com