"ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 41.50க்கு கொள்முதல்.. ஊழலுக்கு நிர்மல் குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்" - இபிஎஸ்

பல இடத்தில் எதிர்ப்பு வந்ததால் யூனிட்டுக்கு 41 ரூபாய் 50 காசுக்கு மின்கொள்முதல் செய்யும் திட்டத்தை ரத்து செய்துள்ளது.
நிர்மல் குமார், இபிஎஸ்
Published on: 
Summary

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியின் கீழ் மின்சாரத்துறையில் ஊழல் நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.


செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நிலையற்ற ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அதை இந்த அரசு சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. அதற்கு பல காரணம் கூறி தட்டிக்கழிக்கின்றார்களே ஒழிய, மின்தடையை சரி செய்ய எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

மின்சாரம்

2011 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது இதுபோல மின்வெட்டு இருந்தது. அப்போது மக்களிடம் வாக்களித்தபடி அம்மா அவர்கள் ஆட்சி அமைத்து 3 ஆண்டுகளில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்கி தடையில்லா மின்சாரம் வழங்கினார்.

2026 இல் ஜோசப் விஜய் பொறுப்பேற்றார். வீரவசனம் பேசும் நிர்மல் குமார் சட்டத்துறை, மின்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதிலிருந்து இந்த குளறுபடி ஏற்படுள்ளது.

நிர்மல் குமார் பேசுகையில் கடந்த ஆட்சிகளில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யப்பட்டது என குற்றம்சாட்டி ஒரு யூனிட் மின்சாரத்தை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்துவந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

அதற்கு மாற்று வழி கண்டுபிடித்து மீண்டும் மின்கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் வேன்றுமென்றே திட்டமிட்டு மின்பற்றாக்குறை இருப்பதுபோல செயற்கையாக ஒரு பிம்பத்தை சித்தரித்தார்.

ஊழல்

இப்போது 37 ரூபாய் 50 காசுக்கு மின் கொள்முதல் என அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். அப்போது ஊழல் எங்கே நடந்துள்ளது? இந்த ஆட்சியில் தானே? 20 சதவீதம் அதிக வெளியில் வாங்கப்பட்டுள்ளது. அதேபோல நவம்பர் முதல் 2027 மே வரை யூனிட்டுக்கு 41 ரூபாய் 50 காசுக்கு வாங்கப்படும் எனவும் பின்னர் நேற்றைய தினம் அது ரத்து செய்யப்பட்டதாகவும் ஊடகத்தில் தகவல் வந்தது.

பல இடத்தில் எதிர்ப்பு வந்ததால் யூனிட்டுக்கு 41 ரூபாய் 50 காசுக்கு மின்கொள்முதல் செய்யும் திட்டத்தை ரத்து செய்துள்ளது. எனவே அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்திய அரசாங்கம் தமிழக வெற்றிக் கழக அரசாங்கம்.

இதற்கெல்லாம் எதிர்காலத்தில் துறை அமைச்சரும் முதலமைச்சரும் பதில் சொல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com