

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த புட்லூர் ராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தீபராஜ் (வயது30). இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரது குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது மேலே சென்ற மின்கம்பி பேனரில் உரசியதில் தீபராஜ் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முரளிதாஸ் தீபராஜ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.