ஆயுத பூஜை: ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்

தொடர் விடுமுறையால் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆயுத பூஜை: ஞாயிறு அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்
Published on

சென்னை:

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஆயுதபூஜை அன்று விடுமுறை தினம் என்பதால் சென்னையில் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால

அட்டவணைப்படி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூலூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் புறநகர் ரெயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com