

திருவாரூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, இவரது மகன் ஆதித்யன்.
இவர்கள் இருவரும் விவசாய நிலத்தில் உழவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின் கம்பி அறுந்து விழுந்தது.
டிராக்டரில் உழுது கொண்டிருந்த ஆதித்யன் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததையடுத்து மின்சாரம் தாக்கி அவர் கீழே விழுந்தார். அப்போது, மகனை காப்பாற்ற சென்ற தந்தையும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திலேயே இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த தந்தை, மகனை கண்ட குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.