அதிமுக நிர்வாகிகள் கூட்டம்- இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு

அதிமுக தலைமை அலுவலகத்தில் 75 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைபொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அதிமுக நிர்வாகிகள் கூட்டம்-  இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு
Published on

சென்னை:

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பன்னீர்சல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. இன்றைய அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது என ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், 75 தலைமை நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் முடிவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு, புதிய பொருளாளராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com