அ.தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி

கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.விடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி
Published on

கோவை:

கோவையை சேர்ந்தவர் அமுல்கந்தசாமி. இவர் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வால்பாறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

கடந்த சில நாட்களாக அமுல் கந்தசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர், அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அமுல்கந்தசாமியிடம் உடல் நலம் விசாரிப்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கோவை வந்தார்.

அவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாவட்டச் செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கார் மூலம் சேலம் புறப்பட்டு சென்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com