த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட்: லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்- எடப்பாடி பழனிசாமி

யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்று 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

ஸ்டிக்கர்

* த.வெ.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

* பட்ஜெட்டில் எந்த முக்கியமான அறிவிப்புகளும் இடம்பெறாதது ஏமாற்றம்.

* சிறந்த பட்ஜெட்டை அறிவிப்போம் என முதலமைச்சரும், அமைச்சரும் கூறினார்கள், ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

* த.வெ.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

* ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி புதிய திட்டமாக பட்ஜெட்டில் த.வெ.க. அரசு அறிவித்துள்ளது.

* ஆட்சி பொறுப்பேற்ற 85 நாட்களில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் த.வெ.க. அரசு அறிவிக்கவில்லை.

விளக்கம் இல்லை

* யாரும் அறிவிக்காத புதிய திட்டத்தை அறிவிப்போம் என வீரவசனம் பேசினார்கள், ஆனால் புதிய திட்டங்களை அறிவிக்கவில்லை.

* தேர்தலின்போது த.வெ.க. அளித்த வாக்குறுதிகள் என்னவாயிற்று.

* மானிய சிலிண்டர், இலவச பேருந்து அறிவிப்பு, இளைஞர்களுக்கு வேலை போன்ற எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பும் இல்லை.

* விவசாயிகளுக்கான கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை.

* வருவாய் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை இருக்கும் போது இதனை எப்படி த.வெ.க. அரசு சரி செய்யும்?

* நிதி பற்றாக்குறையை எப்படி சரி செய்வோம் என்பது குறித்து த.வெ.க. அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

* நிதி பற்றாக்குறையை சரிசெய்ய அமைத்த குழுவினர் நிதி பற்றாக்குறையை சரி செய்வர் என்கிறார்கள், அது எப்படி சாத்தியம்?

* வருவாய் இல்லாமல் புதிய திட்டங்களை த.வெ.க. அரசால் எப்படி நிறைவேற்ற முடியும்.

* திமுக அரசை போல் வர்ணஜாலம் பூசி தவெக அரசும் பழைய திட்டங்களை புதிய திட்டங்கள் போல் அறிவிக்கிறது.

* கடன் வாங்கித்தான் திட்டங்களை செயல்படுத்த முடியும், வேறு வழியில்லை.

* லீக்கேஜ், லீக்கேஜ் என கூறி மக்களை ஏமாற்றுகின்றனர்.

* நிதி பற்றாக்குறையை சரி செய்ய அமைக்கப்படும் 5 நபர் குழு எப்படி கடன் வாங்குவது என யோசனை தருவார்கள் போல.. என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com