

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து நீண்ட தூரம், அதாவது 3 மணி நேரத்திற்கு மேல் இயக்கப்படும் பேருந்துகள் நெடுஞ்சாலையில் உள்ள உணவகங்களில் நிறுத்தப்பட்டு பயணிகள் உணவு மற்றும் தேநீர் அருந்த அனுமதிக்கப்படுவார்கள்.
அரசு பேருந்துகள் ஒரு குறிப்பிட்ட உணவங்களில் மட்டுமே நிறுத்தப்படும். அந்த உணவகங்கள் அரசு மூலம் டெண்டர் விடப்படும். அந்த வகையில் இ-டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
* சுத்தமான கழிப்பறை, தரமான உணவு, இலவச குடிநீர், மொபைல் சார்ஜிங், சிசிடிவி கேமரா மற்றும் பயணிகள் ரேட்டிங் வழங்க QR Code உள்ளிட்ட வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
* அடிப்படை வசதிகள் குறித்து 5-க்கு 2-க்கு கீழ் Rating எனில் 10 நாட்களில் சரிசெய்ய அவகாசம் வழங்கப்படும். அதற்குள் சரி செய்யாமல் தொடர்ந்தால் டெண்டர் முழுமையாக ரத்து செய்யப்படும்.
* பயணிகளின் புகார்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுகளின் அடிப்படையில் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.