ஜூன் 1-ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும்.அதில், வாக்கு எண்ணிக்கையின்போது பூத் முகவர்கள் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
ஜூன் 1-ம் தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

கழக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4-ம் தேதி அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் "மாவட்டக் கழகச் செயலாளர்கள்-கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட் டம்" வருகிற 1-6-2024 காலை 11 மணி அளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார்.

அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com