

குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதி மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
செங்குன்றம் வடகரை பகுதியில் உள்ள மேட்டுத் தெருவில், ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்சுத்திகரிப்பு நிலையம் 2019-20ம் அமைக்கப்பட்டது. பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்த பிளான்ட் செயல்பாட்டுக்குவராமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக மூடிக்கிறது.
குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு வராததால், அப்பகுதி மக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இதுவரை பயன்பாட்டிற்கு வராதது ஏன்? என்று தெரியவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.