

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுகாதாரத் துறையில் தற்காலிக அரசுப் பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 16 அன்று சிவகங்கை அருகே பழமலை நகர் பகுதியில் தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி என்ற இரு இளைஞர்கள் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இவர்களின் உடல்களை வாங்க மறுத்து, இழப்பீடு மற்றும் அரசு வேலை கோரி உறவினர்கள் 4 நாட்களாகத் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இன்று (செப்.20) பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தற்காலிகப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக இதுவரை சிறுவன் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.