திமுக இனி எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது- அமைச்சர் ஆனந்த்

Minister Adhav- Minister Anand-DMK MLA E.V.Velu
Published on

தமிழக சட்டசபையில் இன்றைய கூநீர்வளம், ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கையை அமைச்சர் ஆனந்த் தாக்கல் செய்தார். இதைதொடர்ந்து, நீர்வளத்துறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது.

அப்போது, தமிழக சட்டசபையில் இன்று என்ன கத்தினாலும், கனவு கண்டாலும் திமுக இனி ஆட்சிக்கு வர முடியாது என அமைச்சர் ஆனந்த் கூறியுள்ளார்.

நாங்கள் யாரும் தவறு செய்ய மாட்டோம் என திரும்ப திரும்ப சொல்கிறேன் என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மரியவில்சன்

திமுக ஆட்சியில் தரமற்ற முறையில் தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்தது.

திமுக எம்எல்ஏ எ.வ.வேலு

வரலாறு காணாத அளவுக்கு மழை, வெள்ளப்பெருக்கு அணை இடிந்தது. வரலாறு காணாத அளவுக்கு நீர் வந்ததநன் கரணமாகத்தான் தென்பெண்ணையில் கட்டப்பட்ட பாலம் இடிந்தது.

தென்பெண்ணை ஆற்றில் 3 லட்சம் கன அடி நீர் கரைபுரண்டு ஓடியதால்தான் பாலம் இடிந்து விழுந்தது.

அமைச்சர் ஆதவ்

சோழர் கால கல்லணை இன்றும் தரமாக உள்ளது. நமது காலத்தில் தான் 3 மாதத்தில் பாலம் இடிந்து விழுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com