தீபாவளி- விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை இதுவரை 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
தீபாவளி- விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை இதுவரை 70 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன
Published on: 

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகை

சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவோர் மற்றும் படித்து வருபவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட நேற்று முன்தினம் முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.

இதனால் சென்னையிலிருந்து ஏராளமான வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும்.

வாகனங்கள்

தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறை காரணமாக ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வரத் தொடங்கின. இதன் காரணமாக சென்னை-திருச்சி சாலையில் வாகனங்கள் சாரை சாரையாக அணிவகுத்து சென்றன. இதனால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமான வாகனங்கள் சென்றதால் நேற்று மாலையில் கூடுதலாக இரண்டு வழிகள் திறக்கப்பட்டு, மொத்தம் 8 வழிகள் வழியாக வாகனங்கள் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

70 ஆயிரம் வாகனங்கள் கடந்து சென்றன

விபத்து அதிகமாக நடைபெறும் பகுதிகள் மற்றும் சாலை குறுக்கிடும் பகுதிகளில் போலீசார் சாலைகளை பொதுமக்களும், வாகனங்களும் குறுக்கிடாத வகையில் பேரி கார்டுகளை அமைத்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை 52 ஆயிரத்து 100 வாகனங்கள் தென் மாவட்டங்களை நோக்கி சென்றன.

நள்ளிரவு 12 மணி முதல் தற்போது வரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் என மொத்தமாக இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடந்து சென்றுள்ளன.

போலீஸ் பாதுகாப்பு

இன்றும் ஏராளமான வாகனங்கள் தென்மாவட்டங்களை நோக்கி வரும் என்பதால் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சரவணகுமார் தலைமையில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X