மேற்கு தொடர்ச்சி பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மழை
மழை
Published on: 

மேற்கு தொடா்ச்சி பகுதிகளை ஒட்டிய மலை மாவட்டங்களில் இன்று (அக். 28) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இலங்கை கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இருந்து, ‘அா்னாப்’ மிக தீவிர புயலின் மையம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) மேற்கு தொடா்ச்சி பகுதிகளை ஒட்டிய மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடா்சசி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (அக்.29,30) ஆகிய 2 நாட்கள் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை (அக்.31) வரை, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று (அக்.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை:

வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று (புதன்கிழமை) சூறாவளிக் காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதன்கிழமை, மாலை முதல் காற்றின் வேகம் குறைந்து 80 கி.மீ. வேகத்திலும், வியாழக்கிழமை (அக்.29), காற்றின் வேகம் குறைந்து 60 கி.மீ. வேகத்திலும் அதன்பிறகு படிப்படியாக குறையக்கூடும். தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதன்கிழமை, சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தபகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com